கடலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரித்து கடலூர் முதுநகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசியதாவது:
அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் எட்டுக் கட்சிகள் போட்டியிடுகின்றன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளும் 450 அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் திமுக கூட்டணிக்கு அப்படி எந்த அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
1973ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை கொள்கைபரப்புச் செயலாளராக அறிவித்தது கடலூரில்தான். ஆகவே அதிமுகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு தொகுதிகளிலும் பாமக போட்டியிடுவதே வெற்றிக்கான அறிகுறியாகும்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களான 5.95 கோடியில் அதிகமானவர்கள் பெண்கள் உள்ளனர். ஆக்கல் காத்தல் அழித்தல் சக்தியைக் கொண்ட பெண்கள் வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாத அளவிற்குச் செயல்படுவார்கள். அதிமுக ஆட்சியில் எட்டு ஆண்டில் பெண்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை.
அதிமுக அரசால் பொங்கலுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் ஏழைக் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும். அதன் பின்னர் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். பெண்களுக்குக் கட்டணமில்லா கட்டாயக் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதே பாமகவின் கொள்கை அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
கடலூர் துறைமுகத்தைத் தூர்வாருதல், சென்னையிலிருந்து கடலூர் புதுச்சேரி வழியாக ரயில் போக்குவரத்து அமைத்தல், மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.