சிதம்பரம்:சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத்திருக்கோயில் ஐந்து பஞ்சபூத தளங்களில் ஒன்றானதும்,இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.மிகவும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி,கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோவில் பொது தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்.
இந்த அறிவிப்புக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த பலகையை அகற்றச் சென்றனர்.அவர்களை முற்றுகையிட்டு தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் (27.06.2023) அன்று போலீசார் முன்னிலையில் கனகசபை திறக்கப்பட்டு,அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது.
கனகசபையில் பக்தர்கள் ஏற கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டதால்,கனகசபையில் அனைத்து பக்தர்களும் ஏற உரிமை உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில் 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையை தீட்சிதர்கள் தற்போது மீறியதால் அறநிலையத்துறை தலையிட நேரிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக,தற்போதைய சூழலில் கோயிலை மீண்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்,இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. சென்னையில் நேற்று (28.06.2023) செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'தெய்வம் எப்படி பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்காதோ அது போன்று,தீட்சிதர்களும் தீங்கு விளைவிக்கக் கூடாது.ஆனால் எவையெல்லாம் சட்ட விரோதமோ,அதையெல்லாம் ஒரு சில தீட்சிதர்கள் கையில் எடுத்து செய்கின்றனர்.ஏற்கெனவே நகை சரிபார்ப்பு பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்தனர்.