கடலூர் நகர திமுக செயலாளர் கே.எஸ். ராஜா நேற்று (மார்ச் 07) கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறித்து டிஎஸ்ஆர் நகரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (51) என்பவர் முகநூலில் அவதூறாக பதிவிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
வேளாண்துறை அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது - வேளாண்துறை அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது
வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேளாண்துறை அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது
அதன் பேரில் கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகநூலில் பதிவிட்ட பதிவினை ஆதாரத்துடன் கைப்பற்றிய காவல் துறையினர், முரளிகிருஷ்ணனை கைது செய்தனர். முரளி கிருஷ்ணன் திமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நன்றி தெரிவித்த மாணவர்கள்.. இது அரசின் கடமை, எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் - ஸ்டாலின்