கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் வி. அன்புச்செல்வன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவச் சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.