கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குருவன் குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடி தண்ணீர் வழங்கபட்டுவருகிறது. இந்தத் தொட்டியின் மூலம் கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் இதையும் படிங்க: ஆந்தாலஜி சிரீஸ்: சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரத்தில் அமலாபால்!