தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சியின் டேங்கர் லாரியை சிறைபிடித்து சாலை மறியல்! - போராட்டம்

கடலூர்: குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

By

Published : May 13, 2019, 9:59 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி கஸ்பா தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக தண்ணீரில் கழிவுநீர் கலந்துவருவதாக நகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அலுவலர்கள், ஒரு வாரமாகியும் பிரச்னையை சரி செய்யாததால் பொதுமக்கள் போதிய அளவு தண்ணீரை பிடிக்க முடியாமல், பெரும்பாலானோர் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் வழங்க வந்த டேங்கர் லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி மூலம் மீண்டும் ஒரு தண்ணீர் லாரியை வரவழைத்து குடிநீர் வழங்கி சமாதானப்படுத்தி வைத்தனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம்-கடலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details