தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டை கொண்டாட கடலூர் சில்வர் கடற்கரையில் குவிந்த மக்கள் - கடலூர்

விடுமுறை தினத்தில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடலூர் சில்வர் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கூடினர்.

புத்தாண்டை முன்னிட்டு கடலூர் சில்வர் கடற்கரையில் குவிந்த மக்கள்
புத்தாண்டை முன்னிட்டு கடலூர் சில்வர் கடற்கரையில் குவிந்த மக்கள்

By

Published : Jan 1, 2023, 8:22 PM IST

புத்தாண்டை கொண்டாட கடலூர் சில்வர் கடற்கரையில் குவிந்த மக்கள்

கடலூர்: தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள மெரினா கடற்கரைக்கு அடுத்த மிகப்பெரிய கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை. இன்று புத்தாண்டை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாலையில் இருந்து கடலூர் சில்வர் கடற்கரையில் திரண்டனர்.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அதிகளவில் பொதுமக்கள் வருகை இருந்ததால், போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சீனாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்; உடலை சொந்த ஊர் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details