கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் திருத்துறையூரில் மயானபாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிலப்பகுதி தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு மயான பாதை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சவபாடை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், திமுக பிரமுகர் மனோகர், விவசாய சங்க தலைவர் காந்தி, தமிழக வார்வுரிமை கட்சி பிரமுகர் இளந்திரையன் மற்றும் கிராம மக்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.