தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்ருட்டி சிறுமி கொலை வழக்கு - சிறையில் இளைஞர் தற்கொலை முயற்சி - cuddalur latest news

பண்ருட்டியில் சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Panruti girl murder case
Panruti girl murder case

By

Published : Aug 9, 2021, 1:25 PM IST

கடலூர்: பண்ருட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் பாண்டியன் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து அவரை காதலிப்பதாக கூறி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அவரை மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து பிணையில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் அதே சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கடந்த ஆக.2ஆம் தேதி அன்று சிறுமியை நேரில் சந்தித்த பாண்டியன், நீ இல்லை எனில் நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன், இல்லை நீ விஷம் குடித்து இறந்த போ என கூறி அந்த விஷத்தை சிறுமியிடம் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷத்தை வாங்கி குடித்துள்ளார்.

சிறுமி ஆபத்தான நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையி்ல் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த பாண்டியனை பண்ருட்டி காவல் துறையினர் சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி, பாலியல் தொந்தரவு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சிறைச்சாலையில் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதையும் படிங்கள்: காதலிக்க மறுத்த சிறுமிக்கு விஷம் கொடுத்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details