கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் பகுதியைச் சேர்ந்த சுப்புராயன் என்பவரின் மகன் சுபாஷ் (38). இவர் அப்பகுதியில் ஒன்றிய செயலாளராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். இவரை கடந்த மாதம் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான தாமோதரன் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு: குண்டாசில் 5 பேர் கைது!
கடலூர்: ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கைதானோர்
இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தாமோதரன் (55) ராஜதுரை (25) கவியரசு (21) சுபகணேஷ் (24) தமிழ்வாணன் (23) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, அந்த ஐந்து பேரையும் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சொத்து தகராறு: மாமனார், மாமியாரை தாக்கிய மருமகள்