தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடலீஸ்வரர் கோவில் எல்லைக்கட்டும் திருவிழா; பக்தி பரவசத்தில் ஊரை சுற்றி வந்த இளைஞர்கள்!! - padaleeswarar temple

கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு எல்லைக்கட்டு திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீ பந்தங்களுடன் ஊரைச் சுற்றி எல்லை கட்டி சாமி தரிசனம் செய்தனர்.

பக்தி பரவசத்தில் ஊரை சுற்றி வந்த இளைஞர்கள்
பக்தி பரவசத்தில் ஊரை சுற்றி வந்த இளைஞர்கள்

By

Published : May 30, 2022, 12:41 PM IST

கடலூர்: தென் இந்தியாவின் சிவத்தலங்களில் முக்கிய ஆலயம் கடலூர் பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பிடாரி அம்மனை அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு வந்து தேரடி தெருவில் பூஜைகள் செய்து அம்மனுக்கு ஆடு பலி கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊரைச்சுற்றி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் இந்தாண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

பாடலீஸ்வரர் கோவில் எல்லைக்கட்டும் திருவிழா

இதையும் படிங்க: சாராயக்கடை ஸ்டாப்பாக மாறிய பெரியார் சிலை - கண்டுகொள்ளாத காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details