தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி ஆக்ஸிஜன் சிகிச்சை- சிதம்பரத்தில் கிளீனிக்கிற்கு சீல்! - district collector

சிதம்பரத்தில் அனுமதி இல்லாமல் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்ட கிளினிக், ஆட்சியர் உத்தரவின்பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அனுமதி இல்லாமல் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை - கிளினிக்கிற்குச் சீல்
அனுமதி இல்லாமல் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை - கிளினிக்கிற்குச் சீல்

By

Published : Jun 5, 2021, 7:43 PM IST

கடலூர்: சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் உள்ள முருகேசன் நகரில் ரமேஷ் என்ற மருத்துவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இங்கு சளி, காய்ச்சல் நோய்க்குச் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அவரது கிளினிக்கில் ஆக்ஸிஜன் உருளைகளை வாடகைக்கு வாங்கி அதனை கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தி அதிக பணம் வசூல் செய்வதாக சிதம்பரம் சார் ஆட்சியர் மது பாலனுக்குப் புகார் வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சார் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுடார். அதில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உசுப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரன், நிர்வாக அலுவலர் ரமேஷ், கிராம நிர்வாக உதவியாளர் விஷ்ணுவரதன் ஆகியோர் கிளினிக்கைப் பூட்டிச் சீல் வைத்தனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை கிளினிக்கை திறக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

ABOUT THE AUTHOR

...view details