டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மே 10ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மூன்று வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்! - இளைஞர்கள் கைது
கடலூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதனால், வளம் செழிக்கும் காவிரி மண்ணின் நீர்வளம் பாதிக்கப்படும் என்ற அச்சம் டெல்டா பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திடீரென்று மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கடலூரில் அண்ணாபாலம் அருகே இளைஞர்கள் 15 பேர் பதாகை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.