தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை - கூடலூர் சாலையை மறித்த யானை

நீலகிரி: கூடலுாரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்க்கொள்ளச் சென்ற மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவின் வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை
ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை

By

Published : Dec 30, 2019, 3:59 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள 40 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமாக காணப்படும். இதனால் இந்தப் பகுதியில் ஆய்வினை மேற்கொள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காட்டு யானை ஒன்று அவரது வாகனத்தை வழிமறித்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் சிறிது நேரம் சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானை, அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் வாகனம், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் யானை பின் தொடர்ந்து சென்றன.

சிறிது தூரம் நடந்து சென்ற அந்த யானை, பின்னர் வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக சென்றது. அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் சிறியூர் வாக்குசாவடிக்கு சென்று வாக்குப்பதிவை ஆய்வு செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் மாவட்ட ஆட்சியர் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details