நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வெங்காயத்தை இரண்டு டன்னுக்கும் மேல் பதுக்கி வைத்திருந்தால், ஏழு ஆண்டு சிறை என அரசு அறிவித்த நிலையில் பதுக்கி வைத்த வெங்காயம் முழுவதும் வெளியில் சந்தைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் பெங்களூர் சந்தைக்கு வெங்காயம் வந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால், கடலூர் வியாபாரிகள் பெங்களூரிலிருந்து குறைவான விலைக்கு பல டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து வந்தனர். நேற்று கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இன்று காலை கடலூர் உழவர் சந்தையில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதை ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு வெங்காயத்தை வாங்கினர்.