கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் அலகு 6ல் பாய்லர் வெடித்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் என்எல்சி நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, சென்னை ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.