தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டுப் பாதை இல்லாததால் வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமந்துசெல்லும் அவலம்! - ஸ்ரீமுஷ்ணத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை

ஸ்ரீமுஷ்ணத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை இடுப்பளவு ஆற்று வெள்ளத்தில் சுமந்துசென்று அடக்கம்செய்துள்ளனர்.

சுடுகாட்டுப் பாதை
சுடுகாட்டுப் பாதை

By

Published : Nov 17, 2021, 5:18 PM IST

கடலூர்: கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குள்பட்ட கீரமங்கலம் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை வசதி இல்லாததால் பல காலமாகப் பொதுமக்கள் வெள்ளாற்றைக் கடந்து உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்துவருகிறது.

சுடுகாட்டுப் பாதை இல்லாததால் வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம்

இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (நவம்பர் 15) அக்கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர் உயிரிழந்தார்.

இவரின் உடலை அடக்கம்செய்ய 20-க்கும் மேற்பட்ட உறவினர்கள் இடுப்பளவு ஆற்று வெள்ளத்தில் உயிரைப் பணையம்வைத்து சுமந்து சென்றனர். வெள்ளாற்றைக் கடந்துசெல்ல பாலம் அமைத்துத் தர வேண்டும். இல்லை என்றால் கீரமங்கலம் கிராமத்திலேயே சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Bharathi Mani Passed away: 70 ஆண்டுகால பன்முக வித்தகர் பாரதி மணி காலமானார்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details