தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பிப். 25ஆம் தேதி என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல் - என்எல்சி தொழிற்சங்க வாக்குப்பதிவு

வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ள என்எல்சி தொழிற்சங்கத் தேர்தலில் ஏழு தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன, இந்தத்தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளன.

nlc workers union election held feb 25
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பிப் 25ஆம் தேதி என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்

By

Published : Feb 19, 2021, 10:39 PM IST

கடலூர்: கடலூர் என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, இந்தாண்டு வரும் 25ஆம் தேதி தொழிற்சங்கத் தேர்தலை மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையம் நடத்துகிறது. தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 5ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி பரிசீலனை முடிவடைந்தது. இத்தேர்தலில், தொழிலாளர் முன்னேர்ற சங்கம், சிஐடியு அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தமிழக வாழ்வுரிமை, மதிமுக ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. மற்ற தொழிற்சங்கங்கள் தனித்துப் போட்டியிடுகின்றன. 7,400 தொழிலாளர்கள் இதில் வாக்களிக்கவுள்ளனர். இதில், 51 விழுக்காடு வாக்குகள் பெறும் தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும். இச்சங்கம்தான் என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்கம் தொடர்பான பேச்சு வார்தைகளில் பங்களிக்க முடியும். 51 விழுக்காடு வாக்கு பெறாத நிலையில், அடுத்து வரும் தொழிற்சங்கமும் சேர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பிப் 25ஆம் தேதி என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்

கடந்த முறை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்

கடந்த நான்கு ஆண்டுகளாக சிஐடியு முதன்மை தொழிற்சங்கமாகவும், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இரண்டாவது சங்கமாகவும் இருந்து நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் நலன், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசி சுமூக முடிவுகள் எடுத்தன. வரும் தேர்தலில் எந்த தொழிற்சங்கம் வெற்றி பெறும் என்ற பரபரப்பான சூழ்நிலை தற்சமயம் நிலவி வருகின்றது.

கடந்தமுறை வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மின்னணு இயந்திரம் மூலம் தொழிற்சங்கத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவன்று நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வாக்கைப் பதிவு செய்ய வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்றும், தேர்தல் முடிவுகள் 25ஆம் தேதி இரவு 10மணிக்குள் வெளியாகும் என்றும் தெரியவருகிறது.

இதையும் படிங்க:அரசியல் ஸ்டன்ட்களில் திமுக ஈடுபடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details