தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்தரப்பு பேச்சு வார்த்தையில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அதிருப்தி..போராட்டம் தொடரும் என அறிவிப்பு.. - NLC Jeeva contract labourers

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் இதனால் போராட்டம் தொடரும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு

By

Published : Aug 1, 2023, 11:54 AM IST

முத்தரப்பு பேச்சு வார்த்தையில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அதிருப்தி..போராட்டம் தொடரும் என அறிவிப்பு..

கடலூர்:என்எல்சி பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நேற்று (ஜூலை 31) ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, என்எல்சி அதிகாரிகள் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்துடன் ஆன முத்தரப்பு பேச்சு வார்த்தை நேற்று மாலை கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில், அதிகாரம் மிக்க அதிகாரிகள் யாரும் வராத காரணத்தினால் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் ஒவ்வொரு முறையும், இயக்குனர் அளவிலான அதிகாரிகள் வந்தால் மட்டுமே இதற்கு ஒரு உடன்பாடு எட்டப்படும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை இயக்குனர் தரப்பிலான அதிகாரிகள் யாரும் வராத காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர் கூறுகையில், “என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஆறாவது நாளாக நீடிக்கிறது. நான்கு முறை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் என்எல்சி தரப்பிலே முடிவெடுக்க கூடிய அதிகாரத்தில் இருக்கும் இயக்குனர் வராததால் இந்த உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த முறை இயக்குனர் கட்டாயமாக வந்து விடுவார் என மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பினார்.

என் எல்சி நிர்வாகம் மதிப்பளிக்காமல் அவர்கள் இல்லாமலேயே இந்த பேச்சு வார்த்தை நடந்து முடிந்தது. எனவே திட்டமிட்ட படி எங்களது அனைத்து போராட்டங்களும் நடைபெறுகிறது. அமைதியான வழியில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் அறிவுரையை ஏற்று நடத்தி வருகிறோம். ஆனால் என் எல்சி நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறது.

தொழிலாளர்ளை ஆத்திரமூட்டுகிறது. அரசு துறை என்பதை மறந்து தனியாரைப்போல செயல்படுகிறது. இதனால் அனைத்து தொழிற்சங்கங்களும் எங்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அளவிற்கு போராட்டத்தை தொடங்க உள்ளோம். மேலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மந்தாரக்குப்பம் மற்றும் கடலூர் பகுதிகளிலும் சத்தியா கிரக போராட்டம் நடத்துவது என்றும் நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:கோவிலாங்குளம் சோழர், பாண்டியர் வரலாற்று ஆவணம்; தொல்லியல் சின்னமாகுமா?

ABOUT THE AUTHOR

...view details