கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி அனல் மின் நிலையம் உள்ளது. அனல்மின் நிலையம் 2இல் உள்ள 6ஆவது உற்பத்தி பிரிவின் கொதிகலனில், கடந்த 7ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் திருச்சி காவிரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்! - கடலூர் மாவட்டம் செய்திகள்
கடலூர்: நெய்வேலி என்எல்சி அனல் மின்நிலையம் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, என்எல்சி அனல் மின் நிலையம் முன்பு உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
இதில் சர்புதீன் என்ற நிரந்தர ஊழியர் நேற்று முன்தினம் (மே.8) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, இன்று சண்முகம் (26) என்ற ஒப்பந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். என்எல்சி அனல் மின் நிலையம் முன்பு இறந்த சண்முகத்தின் உறவினர்கள், சக ஊழியர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு உரிய இழப்பீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...தனிமைப்படுத்தப்படும் வார்டை ஆய்வு செய்த காவல் ஆணையர்!