நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து கடந்த 10ஆம் தேதி என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
இதுவரை நிர்வாகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும், இழுபறி நீடித்துவந்தது. என்எல்சி நெய்வேலி இல்லத்தில் சேர்மன் ராகேஷ் குமார் தலைமையில் நிரந்தர தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியு, ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தற்போது வாங்கும் சம்பளத்தைவிட மாதம் ரூ.8,000 கூடுதலாக அளிக்க வேண்டும், ஆண்டுக்கு 750 பேரை பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.