கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் சுரங்கம் இரண்டில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சுரங்கம் இரண்டில் உள்ள யூனிட் ஐந்தில் அமைந்திருக்கும் பாய்லர் திடீரென வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (ஜூலை 1) இரண்டாவது வெப்ப மின் நிலையத்தின் யூனிட் 5 இல் சுமார் 9.45 மணி பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு நிர்வாகி, இரண்டு மேற்பார்வையாளர்கள், மூன்று நிர்வாகமற்ற ஊழியர்கள் மற்றும் பதினேழு ஒப்பந்தத் தொழிலாளர்கள் என இருபத்து மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.