கடலூர் மாவட்டம் நெய்வெலியில் இயங்கிவரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவிலுள்ள கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறு பணியாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 17 பணியாளர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஜூலை 3ஆம் தேதி சிவக்குமார் என்பவரும், ஜூலை 5ஆம் தேதி செல்வராஜ், ரவிச்சந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர்.
என்எல்சி கொதிகலன் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 12ஆக உயர்வு
கடலூர்: நெய்வேலி என்எல்சி கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது
nlc-accident-death-toll rises-to-11
இந்நிலையில், இன்று காலை (ஜூலை 6) மேற்பார்வையாளர் வைத்தியநாதன் (45), ஒப்பந்த தொழிலாளி இளங்கோ (49) ஆகியோர் உயிரிழந்தனர். தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் இதனால் என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாள்களில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:யானை மரணம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி
Last Updated : Jul 6, 2020, 4:26 PM IST