கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் சுரங்கம் இரண்டில் உள்ள யூனிட் 5 பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில், நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். மேலும் இணை ஒருங்கிணைப்பாளர் சுப்புராயன், சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
என்எல்சி விபத்து: உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி! - Candle Carrying Tribute
கடலூர்: என்எல்சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி