தென் மாநிலத்தில் வன்முறை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட "ஜிஹாதி" கும்பலின் தீவிர உறுப்பினரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கடலூரில் கைது செய்துள்ளனர்.
ஜிஹாதி கும்பலை சேர்ந்தவர் கடலூரில் கைது! - special NIA court
கடலூர்: வன்முறை ஏற்படுத்தும் முயற்சியில் செயல்பட்டு வந்த "ஜிஹாதி" கும்பலின் தீவிர உறுப்பினரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கடலூரில் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரஷீத் (25), சென்னை சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பயங்கரவாத கும்பல் தொடர்பான தகவல் அடங்கிய துண்டு பிரசுரங்கள், ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அவரின் மெயிலில் உள்ள விவரங்களை என்ஐஏ ஆய்வு செய்துவருகிறது.
கிடைத்த தகவலின்படி, 2018இல் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, கீழக்கரையைச் சேர்ந்த முகமது ரிஃபாஸ், முபரிஷ் அகமது மற்றும் அபுபக்கர் சித்திக் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.