தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர் வெட்டிக்கொலை! - புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர் வெட்டி கொலை

கடலூர்: மேல்பாதி கும்பலுக்கும், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

By

Published : Jan 1, 2020, 7:17 PM IST

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (28). இவருடைய மனைவி சௌமியா (26). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்களுக்கும் மேல்பாதி காலனியை சேர்ந்த சிலருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அங்குள்ள இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞர்

அப்போது மேல்பாதி காலனியை சேர்ந்தவர்களும், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். சிறிது நேரம் கழித்து மேல்பாதி கும்பல் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த வேல்முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடியது.

இதில் தலையில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் முட்புதரில் வேல்முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது மனைவி சௌமியா மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்ததையடுத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வேல்முருகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

வேல்முருகனின் உடலை மீட்ட நெல்லிக்குப்பம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கொலை செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details