தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 20 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான புதிய கட்டடம்! - hospital

கடலூர்: மகப்பேறு, பச்சிளம் குழந்தைகளுக்காக 20 கோடி ரூபாய் செலவில், மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

hospital

By

Published : Jun 24, 2019, 10:27 PM IST

கடலூர் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் 20 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான புதிய கட்டடம்

மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தில் முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவும், இரண்டாம் தளத்தில் மகப்பேறு வார்டு, மகப்பேறு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மூன்றாம் தளத்தில் பயிற்சி அரங்கம்,100பேர் அமரக்கூடிய அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details