கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ரமேஷ்-க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கடலூரில் மஞ்சகுப்பம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வாகன பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.
அப்போது நாஞ்சில் சம்பத் பேசியதாவது, தற்போது நடைபெற்று வரும் அடிமை அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் பாசிச பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். ஆளுநரிடம் புகார் கொடுக்கலாம் என்று சென்றால் அங்கு நிர்மலாதேவி விவகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறை அதிகாரியிடம் புகார் கொடுக்கச் சென்றால் டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் வழக்கு கொட்டி கிடக்கிறது.
மோடியிடம் புகார் கொடுக்கலாம் என்றால் அவர் இந்த தேசத்தின் மானத்தையே காற்றில் பறக்க விட்டுள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவரிடம் சென்று புகார் கொடுக்கச் சென்றால் அவர் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சிக்கு செல்கிறார். யாரிடமும் புகார் கொடுக்க இடமில்லை என்பதால் மக்களிடமே புகார் கொடுத்து விடலாம் என்றுதான் இந்த புகாரை மக்களாகிய உங்களிடம் கூறுகிறோம்.