கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் வசித்துவரும் தம்பதியினர் சேகர் கலா (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது அவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கலா தனது வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இவரது கணவர் சேகர் என்பவர் மீன்பிடித் தொழிலுக்காக கடலில் சென்று வீடு திரும்பி சென்று பார்த்த போது கலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து காணப்பட்டார். இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.