தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

760 மாணவ, மாணவிகளுக்கு சொந்த செலவில் குடை வழங்கல் - ஆச்சர்யப்படுத்திய தலைமை ஆசிரியர்!

கடலூர்: சிதம்பரம் அருகேயுள்ள முட்லூர் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழையில் நனையக்கூடாது என்று கருதி, அப்பள்ளியின் தலைமையாசிரியர் அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குடை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

Mutlur higher secondary school head master

By

Published : Nov 7, 2019, 6:43 PM IST

சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 760 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரியும் மணிவாசகம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய விஷயத்தைச் செய்துள்ளார்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் மழையில் நனையாமல் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடிந்து மழையில் நனையாமல் வீடு திரும்புவதற்கும் ஏற்ற வகையில், அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தன் சொந்தச்செலவில் குடை வாங்கி தரமுடிவு செய்துள்ளார்.

மாணவர்களுக்குத் தன் சொந்தச்செலவில் குடை வழங்கிய தலைமையாசிரியர்

அதன்படி குடைகளை வாங்கி வந்த தலைமையாசிரியர் மணி வாசகம், தனது தாயார் சேதுபதி அம்மாள் கைகளால் மாணவ, மாணவியர்களுக்குக் குடைகளை வழங்கினர். இந்நிகழ்வில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், அப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியரின் இந்தச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு' விண்ணப்பிங்க!

ABOUT THE AUTHOR

...view details