கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு கடந்த ஒன்றரைமாத காலமாக அமலில் இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் மே ஏழாம் தேதி முதல் சென்னை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
மதுப்பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளித்த நகராட்சி நிர்வாகம் - மதுப்பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு
கடலூர்: மதுப்பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளித்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் பேரில் கடலூரில் நேற்று (மே 7) கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளுக்கு வந்து குவிந்தனர். இதனையடுத்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சுட்டெரிக்கும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுவை வாங்குவதற்கு மதுப்பிரியர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குவிந்தனர்.
அப்போது அங்கு வந்த நகராட்சியின் கிருமி நாசினி வாகனம் அங்கிருந்த மதுப்பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளித்தனர். இதைக் கண்ட சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திார். கண்துடைப்பு விசாரணை தேவையில்லை. மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசராணை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.