தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப தகராறு காரணமாக குழந்தையுடன் தாய் தற்கொலை - குழந்தையுடன் தாய் தற்கொலை

கடலூர்: குடும்பத்தகராறு காரணமாக குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : Jul 4, 2020, 1:41 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவருக்கும் ஆட்கொண்ட நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவரின் மகள் பிரியங்கா (22) என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு வயதில் மீனலோஷினி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைக்கு ஜூலை 6ஆம் தேதி முதல் பிறந்த நாள் என்பதால் அதை சிறப்பாகக் கொண்டாட பிரியங்கா முடிவு செய்திருக்கிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலமுருகனுக்கும் பிரியங்காவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த பிரியங்கா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் பாலமுருகன் வெளியே சென்ற நேரம் பார்த்து தனது குழந்தை மீனலோஷினி கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காட்டுமன்னார்கோயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஜவர்கலால், காவல் ஆய்வாளர் ராஜா, காவல்துறையினர் குழந்தை, தாயை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பழக்கத்திற்குள்ளான கிருமிநாசினி!

ABOUT THE AUTHOR

...view details