கடலூர் முதுநகர் சலங்கைக்காரத் தெருவைச் சேர்ந்த தம்பதியர் ரவி- பூங்கொடி. இவர்களது மகள் மீனா. இவருக்கும் சோனங்குப்பத்தைச் சேர்ந்த நம்புராஜ் என்பவருக்கும் திருமணமாகி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறால் மீனா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து நம்பிராஜ், தனது மாமியார் வீட்டிற்குச் சென்று சமாதானம் பேசியுள்ளார். ஆனால் அதற்கு மீனா உடன்படாமல், தனது தாய் வீட்டிலேயே தங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நம்பிராஜன், மனைவி, மாமியாரைப் பின்தொடர்ந்து முதுநகர் காவல் நிலையம் அருகே கடைவீதியில் சென்றபோது இருவரையும் சராமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.