தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 2401 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்! - எம்.சி.சம்பத்

கடலூர்: தனியார் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பணி ஆணையை வழங்கினார்.

more-than-10-thousand-people-participated-in-the-private-sector-employment-camp
more-than-10-thousand-people-participated-in-the-private-sector-employment-camp

By

Published : Feb 8, 2021, 6:27 AM IST

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று (பிப்.07) நடத்தியது. இம்முகாமில் 171 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இம்முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல், ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்புகளை முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்வான 2401 பேருக்கு பணி ஆணையை தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இம்முகாமில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், “வேலை கிடைக்கப் பெற்றவர்கள் பணியில் கட்டாயம் இணைய வேண்டும். இல்லையெனில் மற்றவர்களுக்கு வாய்ப்பு நழுவிவிடும். தமிழ்நாடு மனித வளம் நிறைந்த மாநிலம். மற்ற மாநிலங்களை விட தொழில் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழ்நாடு” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

ABOUT THE AUTHOR

...view details