கடலூர்:பாடலீஸ்வரர் பெரிய கோயில் பின்புறம் அமைந்துள்ள வீட்டின் மாடியில் இறந்த நிலையில் தாய் குரங்கு, மற்றும் பிறந்த நிலையில் குட்டி குரங்கு ஒன்று இருந்துள்ளது. இதனைச்சுற்றி ஏராளமான காகங்கள் சத்தம் இட்டதால் வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்துள்ளார்.
அங்கு இறந்த நிலையில் குரங்கு இருப்பதைக்கண்டு தன்னார்வலர் செல்லாவிற்குத் தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தன்னார்வலர் செல்லா, பிறந்த நிலையில் இருந்த குட்டி குரங்கைப்பாதுகாப்பாக மீட்டு அந்த குட்டி குரங்குக்கு முதலில் பால் கொடுத்தனர்.
பின்னர் இறந்த நிலையில் கிடந்த தாய் குரங்கை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவர்கள் தாய் குரங்கு இறந்துவிட்டதாகத் தெரிவித்த நிலையில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தாய் குரங்கை வனத்துறையினர் முன்னிலையில் காப்புக்காட்டில் புதைத்தனர்.
குறிப்பாக தாய் குரங்கு குட்டியை ஈன்ற நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக தான் உயிரிழந்துள்ளது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் குட்டி குரங்கை வனத்துறை உதவியுடன் தன்னார்வலர் செல்லா பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் குரங்குகள் கூட்டத்துடன் விடுவதாக மீட்டுச்சென்றார்.
பிரசவத்தின்போது உயிரிழந்த தாய் குரங்கு - மனிதநேயத்துடன் குட்டியை மீட்ட தன்னார்வலர்! இதையும் படிங்க:Video: காரை தாக்கி கண்ணாடியை பறக்கவிட்ட யானை - திக் திக் நிமிடங்கள்...