கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சத்திய ஞானசபை, தர்மசாலை, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.
'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு - Minister Sekarbabu press meet
வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் அமைக்க விரைவில் பணி தொடங்க உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அவருடன் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், அறநிலைத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடலூர் சத்திய ஞான சபை சர்வதேச மையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
இதற்காக சர்வதேச அளவில் வரைபடம் கோரப்பட்டுள்ளது. அது வந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் எது சிறந்தது என ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்" என்றார். வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை சர்வதேச மையமாக அமைக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.