விருத்தாச்சலம் பாமக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சம்பத் பரப்புரை - PMK candidate
கடலூர்: விருத்தாசலத்தில் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வேனில் வீதிவீதியாக கூட்டணிக் கட்சியினருடன் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அமைச்சர் சம்பத் பரப்புரை
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி விருத்தாசலத்தில் 33-வது வார்டு பகுதியில் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கொடியை கட்டிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். சித்தலூரில் தொடங்கி காந்திநகர் சாலை, கடைவீதி, மேட்டு காலனி, அய்யனார் கோயில் வீதி, மேலக்கோட்டை வீதி, தெற்குகோட்டை, வடக்குக்கோட்டை வீதி, சன்னதி கண்டேன்குப்பம், பெரியார் நகர், போதனூர் நகர் ஆகிய பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் வீதிவீதியாகச் சென்று ஓட்டு சேகரித்தார்.