தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் உள்ளாட்சித் தேர்தல் - அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களிப்பு!

கடலூர்: மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

Minister MC Sampath polling in Cuddalore
Minister MC Sampath polling in Cuddalore

By

Published : Dec 30, 2019, 12:53 PM IST

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 379 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமுள்ள 3,038 பதவியிடங்களில் 393 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மீதமுள்ள 2,645 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 60 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 619 பேரும், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 1,277 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,840 பேரும் போட்டியிடுகின்றனர்.

அமைச்சர் எம்.சி. சம்பத் பேட்டி

இவர்களைத் தேர்வு செய்வதற்காக 1,292 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தல் பணியில் சுமார் 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதோடு, சுமார் 3 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எளிதான வெற்றி உள்ளதாகவும் இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாவட்டமாக இருக்கிறது என்றும் பெருமையுடன் கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சீனர்கள் ஆர்வம் - தொழில் துறை அமைச்சர் சம்பத்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details