கரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் அன்றாட தேவைக்காக அவதிப்படுகின்றனர். அதேவேளையில் மது போதைக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத காரணத்தால் போதை தரக்கூடிய எந்த பொருளையும் உட்கொள்ளும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கடலுார் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், எழில்வாணன், மாயகிருஷ்ணன், சந்திரஹாசன், சுந்தரராஜன் ஆகியோர் குள்ளஞ்சாவடி அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.