தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறிச்சந்தை இடமாற்றம்: நகராட்சி அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்! - Merchants arguement with municipal officials

கடலூர்: பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறிச்சந்தையை அகற்ற வலியுறுத்திய நகராட்சி அலுவலர்களுக்கும், காய்கறி விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காய்கறி சந்தை இடமாற்றம்... நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்!
காய்கறி சந்தை இடமாற்றம்... நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்!

By

Published : Jun 1, 2020, 4:56 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக கடலூரில் உழவர் சந்தை அம்மாவட்ட பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு காய்கறி வாங்கவரும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்!

அதன்படி தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பேருந்து போக்குவரத்து நடைபெறும் என அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று கடலூரில் 11 பணிமனைகளில் இருந்து 608 பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று காலை முதலே கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது.

இங்கு பேருந்து சேவையை தொடங்கியதால் அங்கு உள்ள காய்கறிக் கடைகளை கடலூர்-சிதம்பரம் செல்லும் சாலையில் கோ ஆப்டெக்ஸ் எதிரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்துள்ளனர். அங்கு கழிப்பறை வசதி, பந்தல் எதுவும் அமைத்து தரவில்லை எனவும், வெயிலில் தங்களால் வியாபாரம் செய்ய முடியாது எனவும் கூறி மறுத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியதால் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு நகராட்சி சார்பில் அலுவலர்கள் வந்து கூறினர். இந்நிலையில் நகராட்சி அலுவலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருபுறம் பேருந்து சேவையும், ஒருபுறம் காய்கறி விற்பனையும் நடைபெறுவதால் அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. காய்கறி விற்பனை செய்பவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் தகுந்த இடைவெளியை மறந்து பயணித்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details