தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூடப்பட்ட டாஸ்மாக்: மெத்தனாலை குடித்த மூன்று பேர் உயிரிழப்பு

கடலூர்: கள்ளச்சாராயம் கிடைக்காத காரணாத்தால் மெத்தனாலை குடித்த சந்திரஹாசன், மாயகிருஷ்ணன், சுந்தரராஜன் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

கடலுார்:கள்ளச்சாராயம் கிடைக்காத காரணாத்தால் மெத்தனாலை குடித்த சந்திரஹாசன், மாயகிருஷ்ணன், சுந்தரராஜன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஓருவர் கவலைக்கிடமாக உள்ளார்
கடலுார்:கள்ளச்சாராயம் கிடைக்காத காரணாத்தால் மெத்தனாலை குடித்த சந்திரஹாசன், மாயகிருஷ்ணன், சுந்தரராஜன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஓருவர் கவலைக்கிடமாக உள்ளார்

By

Published : Apr 15, 2020, 1:09 PM IST

கரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் அன்றாட தேவைகளுக்காக அவதிப்படுகின்றனர். அதேவேளையில் மது போதைக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத காரணத்தால், போதை தரக்கூடிய எந்த பொருளையும் உட்கொள்ளும் அவலநிலைக்கு ஆளாகிள்ளனர்.

மெத்தனால் குடித்து முன்று பேர் உயிரிழப்பு

இந்நிலையில், கடலுார் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், எழில்வாணன், மாயகிருஷ்ணன், சந்திரஹாசன், சுந்தரராஜன் ஆகியோர் குள்ளஞ்சாவடி அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். மேலும் சாராயம் இல்லாத விரக்தியில் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மெத்தனால் பொருளைகளைத் திருடிச் சென்று குடித்துள்ளனர்.

மெத்தனாலை குடித்த இவர்கள் இன்று காலை திடீரென்று மயக்கம் அடைந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரஹாசன் உயிரிழந்தார். மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மாயகிருஷ்ணன், சுந்தரராஜன் ஆகியோர் இன்று காலை உயிரிழந்தனர். எழில்வாணன் என்பவர் கவலைக்கிடமாக உள்ளார். மேலும் ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவின்படி, சிப்காட் தொழிற்சாலைக்கு சீல் வைத்த காவல் துறையினர் மெத்தனால் திருடிய குமரேசன் என்பவரைக் கைது செய்தனர்.

இதையும் படிக்க: கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 200 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details