தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா பாதுகாப்பு உடை வழங்கிய அமைச்சர் - கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

கடலூர்: மருத்துவர்கள், செவிலியர்கள் நலன் கருதி 2,500 கரோனா கவச உடைகள், 1000 முகக்கவசங்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

கரோனா பாதுகாப்பு உடை வழங்கிய அமைச்சர்
கரோனா பாதுகாப்பு உடை வழங்கிய அமைச்சர்

By

Published : Apr 8, 2020, 10:32 AM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மேலும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் அயராது தங்கள் பணிகளை போர்க்கால அடிப்படையில் செவ்வனே செய்து வருகிறார்கள்.

அதனடிப்படையில் 2,500 கரோனா கவச உடைகள், 1000 முகக்கவசங்களை மருத்துவர்கள், செவிலியர்கள் நலன் கருதி வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: இன்றைக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்

ABOUT THE AUTHOR

...view details