மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு, மாசிமகம் திருவிழா ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் கொண்டாடப்படும். இதையொட்டி, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாசி மகம் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கடலூரைச் சுற்றியுள்ள திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலிருந்து உற்சவர்களை, மேளதாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் அழைத்துவந்தனர். அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி, சிறப்பு அலங்காரம், பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூரில் மாசிமகம் திருவிழா கொண்டாட்டம் மாசிமகம் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு கடற்கரையில் திதி கொடுத்தனர். பொதுமக்களின் அதிகப்படியான கூட்டம் காரணமாக சில்வர் பீச்சில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் மாசிமகம் தீர்த்தவாரிக்காக திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயிலிலிருந்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பாக கால் நடையாக தொடங்கிய உற்சவ மூர்த்தியின் பல்லக்கு ஊர்வலம், இன்று தீர்த்தவாரிக்காக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பக்தர்கள் அழைத்துவந்திருந்தனர்.
இதையும் படிங்க:திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம்