தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு: எளிய முறையில் நடந்த திருமணம் - எளிமையான முறையில் நடைப்பெற்ற திருமணம்

கடலூர்: தேசிய ஊரடங்கால் வீட்டிலேயே எளிமையான முறையில் தம்பதி திருமணம் செய்துகொண்டார்.

marriage
marriage

By

Published : Apr 29, 2020, 3:32 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா, பீச், திரையரங்கம், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை மூடப்பட்டன.

இதனால் கோயிலில் நடைபெற்றுவந்த திருமணங்கள் ஊரடங்கும் முடியும்வரை நடைபெறாது என அந்தந்த கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையான முறையில் நடைப்பெற்ற திருமணம்

இதனால் தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து கடலூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு வெங்கட்ராஜ் - புவனேஸ்வரி என்ற தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக திருமண மண்டபங்கள், கோயில்கள் அடைக்கப்பட்டதால் அவர்களுடைய திருமணமும் எளிய முறையில் வீட்டிலேயே நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details