கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் ஷஃபத் - ஷாஹின் மணமக்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. ஏராளமான உறவினர்களிடையே இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
ராம், ரஹிம், ராபர்ட் எல்லோரும் இந்தியர்களே - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கல்யாணப் பரிசு! - இந்து முஸ்லீம் கிறிஸ்துவர் மூவரும் ஒன்று
கடலூர்: இஸ்லாமிய தம்பதியர்கள் திருமண விழாவில் இந்து நண்பர்கள் நோ சிஏஏ, நோ என்ஆர்சி என்ற வாசகம் அச்சிட்டு அன்பளிப்பு வழங்கி சமத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மணமக்களை வாழ்த்தி மகிழ மணமக்களின் நண்பர்களான இந்துக்களில் சிலர் தாங்கள் வழங்கிய அன்பளிப்பில் ராம், ரஹிம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே. ஒருங்கிணைந்து சொல்லுவோம் நோ சிஏஏ, நோ என்ஆர்சி (No CAA - No NRC) என்ற வாசகம் பதித்து அன்பளிப்பை வழங்கினர்.
“நம்மை யாராலும் பிரிக்க இயலாது. எனவே மக்கள் மத்தியில் சதுரங்க சடுகுடு ஆட்டமாடும் அரசியலை முறியடிப்போம்; நாம் ஒற்றுமையாக இருப்போம். இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்கள் என்றுமே இந்தியர்களே; ஒற்றுமையே நமது பலம்” என மணமக்களை வாழ்த்துரை கொண்ட வாசகம் அடங்கிய அன்பளிப்பு வழங்கிய நிகழ்வு உறவினர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.