தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு தலைக் காதல் விவகாரம்: பெண்ணுக்கு தீ வைத்த நடத்துனர் - ஒரு தலைக்காதல் தீ வைப்பு

கடலூர்: ஒரு தலைக்காதல் விவகாரத்தால், பேருந்து நடத்துனர் ஒருவர் நெய்வேலியைச் சேர்ந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man try to burn women for one side love  கடலூர் மாவட்டச் செய்திகள்  கடலூர் தீ வைப்பு  ஒரு தலைக்காதல் தீ வைப்பு
ஒரு தலைக் காதல் விவகாரம்: பெண்ணுக்கு தீ வைத்த நடத்துனர்

By

Published : Feb 21, 2020, 3:02 PM IST

நெய்வேலியைச் சேர்ந்த திருமணமான சலோமி(21) என்ற பெண் வடலூரில் உள்ள கடையில் வேலை பார்த்துவருகிறார். இவர், நெய்வேலியிலிருந்து தினந்தோறும் பேருந்தில் வருவது வழக்கம். அப்போது, அந்தப் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரிந்த சுந்தரமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தவறாகப் புரிந்துகொண்ட சுந்தரமூர்த்தி அந்தப் பெண்ணை ஒருதலையாகக் காதலித்துள்ளார். இதனைப்புரிந்து கொண்டு அந்தப் பெண் சுந்தர மூர்த்தியிடம் பேசாமல் அவரை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, இன்று அந்தப் பெண் வேலை பார்க்கும் கடைக்குச் சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

நடத்துனர் தீ வைத்ததால் காயமடைந்த பெண்

இதில், சலோமி வலி தாங்க முடியாமல் அலறித்துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சலோமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், சுந்தரமூர்த்தியைப் பிடித்த பொதுமக்கள், அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவள்ளனர்.

இதையும் படிங்க:வளர்ப்பு மகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரத் தந்தை

ABOUT THE AUTHOR

...view details