கடலூர்: மத்திய அரசு கடந்த 15 நாள்களுக்குள் சிலிண்டர் விலையை சுமார் 100 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது. தற்பொழுது கரோனா காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் பல குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.
எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் கடலூரில் தலைமை அஞ்சலகம் அருகில் மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரிவைத்தனர். மத்திய அரசைக் கண்டித்தும், சிலிண்டர் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகர், இளைஞர் காங்கிரஸ் கடலூர் மாவட்டத் தலைவர் கலையரசன் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலையிட்டு ஒப்பாரிவைத்து ஆர்ப்பாட்டம்