கடலூர் மாவட்டம், முதுநகர் அருகேயுள்ள பச்சையங்குப்பத்தைச் சேர்ந்தவர் வினிதா (23). இவரும் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருவரசன் (27) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், காதலன் திருவரசனுக்கு வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். இதையறிந்த, வினிதா இது குறித்து அவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மனமுடைந்த வினிதா கடந்த 10ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, வினிதாவுக்கு கடந்த 15ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் தான் எலி மருந்து சாப்பிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வினிதாவின் பெற்றோர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.