தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி சீட்டு விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த சரவணன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

lottery
lottery

By

Published : Dec 14, 2019, 1:23 PM IST

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த நகை தொழிலாளி அருண் என்பவர் லாட்டரி சீட்டு மோகத்தால் தனது மொத்த சொத்துக்களையும் இழந்து, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு லாட்டரி விற்பனையை முழுவதுமாக ஒழித்துவிடுங்கள் என கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றையும் அவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், காவல் துறையினர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேர், கடலூரில் 13 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனிடையே, கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த லாட்டரி சீட்டு வியாபாரியான துரைராஜ் என்பவரின் மகன் சரவணன்(30) என்பவரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பொதுமக்கள் 90873 00100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details