கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து லால்கான் தெருவில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான லாரி, சுமார் 500 உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு கொல்கத்தா நோக்கி புறப்பட்டது. லாரியை சங்ககிரியை சேர்ந்த கோபி என்பவர் ஓட்டி வந்தார். லாரி புறப்பட்டு சிறிது தூரத்தில், திடீரென இன்ஜினில் எலக்ட்ரிக் ஷாட் ஆகி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டார். ஆனால், தீயை அணைக்க முடியாததால் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி, வீரசேகர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து லாரியில் உள்ள தீயை அணைத்தனர்.